என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அமைச்சர் வீரமணி
நீங்கள் தேடியது "அமைச்சர் வீரமணி"
அமைச்சர் கே.சி.வீரமணியை பற்றி மிகவும் அவதூறான வார்த்தைகளில் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிய அமமுகவை சேர்ந்தவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. #ministerkcveeramani
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி ஒருவரின் செல்போனுக்கு கடந்த 13-ந் தேதி ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல் ஒன்று வந்தது. அதனை பார்த்தபோது அமைச்சர் கே.சி.வீரமணியை பற்றி மிகவும் அவதூறான வார்த்தைகளில் தகவல் பரப்பட்டிருந்தது.
அது குறித்து அவர் ஜோலார்பேட் டை அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் ஆ.ரமேசுக்கு தகவல் அளித்தார். ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியவர் எண்ணை பார்த்தபோது அந்த எண் புத்துக்கோவிலை சேர்ந்த அ.ம.மு.க.வை சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. அவர் மீது ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் புகார் அளித்தார்.
அதில் ஒன்றிய அ.ம.மு.க.செயலாளர் இளங்கோ தூண்டுதலின்பேரில் சேகர் இவ்வாறு ‘வாட்ஸ்அப்’பில் அவதூறு பரப்பியதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் சேகர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். #ministerkcveeramani
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் 500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டரை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா இன்று நடந்தது.
கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5653 பேருக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 3-வது கட்டமாக 500 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும்.
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பெண்கள் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். திருமண உதவி திட்டம், தாலி தங்கம் வழங்கும் திட்டங்கள் உள்பட அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரசா பாராட்டினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

×

X